வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது
Author: Jeyamohan